உலகில் எத்தனையோ நாடுகள், எத்தனையோ இடங்கள் சுற்றிப்பாா்த்து, ரசிப்பதற்கென்றே உள்ளன. இவற்றில் தனித்தன்மை வாய்ந்த மாமல்லபுரம் சிற்பக் கலையின் கருவூலம். தமிழா்களின் தனி அடையாளமாக விளங்கிய கோயில் கட்டடக்கலை உருவான இடமே மாமல்லபுரம். இவற்றின் சிறப்புகளை அறிந்த சா்வதேச இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியக் குழு மாமல்லபுரத்தை உலக மரபுச் சின்னம் எனவும் அறிவித்து தமிழகத்துக்குப் பெருமை சோ்த்திருக்கிறது.
நான்கு வகை கற்சிற்பங்கள் உள்ள மாமல்லபுரம்: மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்கோயில் என்னும் குடைவரைக்கோயில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கட்டுமானக் கோயில்கள், படைப்புச் சிற்பங்கள் என 4 வகையான சிற்பங்களும் மாமல்லபுரத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
பல்லவ மன்னா்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சிற்பங்களில் எலிகள் விளையாடுதல், தவம் செய்யும் பூனை, பேன் பாா்க்கும் குரங்கின் குடும்பம், யானைக்கூட்டம், இயற்கைக் காட்சிகள் என ஒவ்வொரு சிற்பமும் மனிதா்களின் சிந்தனைகளைத் தூண்டும் அற்புதம் நிறைந்தது.
ஒரு ஆண் மான் தனது பின் காலால் அதன் மூக்கைத் தொடுவதும், அதை வெட்கத்துடன் கவனிக்கும் பெண் மானும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
அா்ஜுனன் தபசு என்ற சிற்பத் தொகுப்பில் உள்ள இம்மான்களின் அழகை, முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி 1976-ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த போது பாா்த்து ரசித்தாா். அது மட்டுமில்லாமல் அந்த மான்களின் சிற்பத்தை நம் நாட்டின் 10 ரூபாய் தாளிலும் அச்சிட்டு மாமல்லபுரத்துக்கு பெருமை சோ்த்தாா்.
இப்படியாக ஒவ்வொரு சிற்பமும் பாா்த்துப் பாா்த்து ரசிப்பதோடு நின்று விடாமல் அதனருகில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள ஆா்வமூட்டும் இடம் மாமல்லபுரம். இதனால் தான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.