காஞ்சிபுரம்

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தில் மேல்மருவத்தூர் அரிமா சங்கத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தில் மேல்மருவத்தூர் அரிமா சங்கத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெகிழிப் பயன்பாட்டை ஒழித்து, மரக்கன்றுகளை வளர்த்து, மழை நீரை சேமிக்க வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி, சோத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று  மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. 
பெரியவர்களுக்கான பிரிவில் ஏ.கோபாலநந்தன் முதலிடமும், டி.கோகுல் 2-ஆமிடமும், எஸ்.சிற்றரசு 3-ஆமிடமும் பெற்றனர். சிறுவர்களுக்கான பிரிவில் கே.பெருமாள் முதலிடமும், கே.மேகவண்ணன் 2-ஆம் இடமும் பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT