காஞ்சிபுரம்

பச்சையப்பன் கல்லூரியில் ரத்ததான முகாம்

DIN

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் கழகம் சார்பில் ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது.
 காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமவனை, அரிமா சங்கமும் முகாமில் இணைந்தன. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) என்.பழனிராஜ் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏ.பி.சுரேஷ்பாபு, எம்.ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 153 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
 காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவர்களிடம் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் விமுனாமூர்த்தி ரத்ததானத்தின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ரத்ததானம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை பள்ளி முதல்வர் (பொறுப்பு) என்.பால்ராஜ் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT