காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி விழா

DIN

நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீராஜ கணபதி கோயிலில் சயனக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ள அத்திவரதரை திரளான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
 நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
 அண்ணா குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் சயனக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர், ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திரளான பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டனர்.
 இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் 41-ஆம் ஆண்டு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 தினமும் பல்வேறு அலங்காரத்தில் படவேட்டம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 8-ஆம் நாளான சனிக்கிழமை அத்திவரதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்பாளை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT