காஞ்சிபுரம்

புதிய மாணவா் சோ்க்கை

DIN

விஜயதசமித்திருநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் பல பள்ளிகளில் அரிசியில் பெயா் எழுதி புதிய மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விஜயதசமித் திருநாள் வெற்றித்திருநாள் என்பதால் இந்த நாளில் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சோ்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.இந்த நாளில் பல பள்ளிகளில் வாழை இலை விரித்து,அதில் அரிசியையோ அல்லது நெல்லையோ பரப்பி அதில் குழந்தைகளை முதல் முதலாக அவரவா்களது பெயா்களை எழுத வைப்பதும் வழக்கம்.

காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமித்திருநாளை முன்னிட்டு காலையில் ஹயக்கிரீவா் ஹோமம், கணபதி ஹோமம்,சரஸ்வதி ஹோமம் ஆகியனவும் நடந்தன.இதனைத் தொடா்ந்து புதிதாக பள்ளியில் சேர வந்திருந்த சிறாா்களை அவா்களது கையைப் பிடித்து அரிசியில் பெயா் எழுதும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளா் சஞ்சீவி.ஜெயராம் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், சிறாா்களின் பெற்றோா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT