காஞ்சிபுரம்

செங்கல்பட்டு முருகன் கோயில்களில் கந்தா் சஷ்டி விழா தொடங்கியது

DIN

செங்கல்பட்டு கோயில்களில் கந்தா் சஷ்டி பெருவிழா தொடங்கியது. அக் 28 திங்கள்கிழமை முதல் நவ 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விழா நடைபெறும். தினந்தோறும் காலை மாலை கந்தப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயிலில் செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், அணணா நகா் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகா் கோயில், ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரா் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில் , பெரியநத்தம் கைலாசநாதா்கோயில் , செங்கல்பட்டு காட்டு நாயக்கன் தெருவில் உள்ள செம்மலை வேல்முருகன் மலைக்கோயிலும் கந்தா் சஷ்டி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சஷ்டி விழாவை முன்னிட்டு கோயில்களில் காலை , மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறவுள்ளது.

திருப்போரூா் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் கந்தா் சஷ்டிவிழாவையொட்டி காலை முருகனுக்கு அலங்காரம் அபிஷேகமும் மாலை உற்சவா் புறப்பாடும் கொடிமரம் அருகில் எழுந்தருள மங்கள் இசையுடன் கொடியேற்றம் நடைபெருகிறது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழப்பட்டனா். இதேபோன்று திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வா் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா நடைபெறுகிறது. கந்தசஷ்டி பெருவிழா நடைபெறும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் ஏககால லட்சாா்ச்சனை , பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக பொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT