காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 28-ல் தொடக்கம்

DIN


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 28-ஆம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்குகிறது.

அனுக்கை சண்டிஹோமம், வாஸ்துசாந்தியுடன் விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் உற்சவர் காமாட்சி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தினமும் இரவு சூரசம்ஹாரம், பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளன. விழா நடைபெறும் நாள்களில் பிதுர்தினம் சதுர்வேத பாராயணம்  நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி துர்க்கை புறப்பாடுடன் சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது. 8-ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு, காலை தீர்த்தவாரி, இரவு தங்கரதம் புறப்பாடு நடைபெறுகிறது. 9- ஆம் தேதி சுவர்ண சகஸ்ரகலச ஸ்தாபனம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஹோம், 10-ஆம் தேதி காலையில் ஸ்வர்ண கலசாபிஷேகம், இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் நாள்களில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், நவ வர்ண பூஜை, கன்யா பூஜை மற்றும் ஸþவாஹினி பூஜை நடைபெற உள்ளன. 

விழா ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை தர்மகர்த்தா விஸ்வநாத சாஸ்திரி, நிர்வாக அலுவலர் எஸ்.நாராயணன், இந்து சமய அறநிலையத் துறை கோயில் நிர்வாக அலுவலர் என்.தியாகராஜன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT