காஞ்சிபுரம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 260 தொழிலாளர்கள் கைது

DIN

இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்த 260 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

போந்தூர் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 500 பேரும், ஒப்பந்தம் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் 500 பேரும் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், செங்கை அண்ணா ஜனநாயக தொழிலாளர்கள் சங்கம் என்ற சங்கத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் தொடங்கினர். இதனால் அதிருப்தியடைந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் பணிக்கு வரவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர், வெளிமாவட்ட, மாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நிரந்தரத் தொழிலாளர்கள் 400 பேர் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இத்தொழிலாளர்கள் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட 260 தொழிலாளர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அவர்களை மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT