காஞ்சிபுரம்

காஞ்சி சங்கர மடத்தில் விஷுக்கனி தரிசனம்

DIN

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவரின் அதிஷ்டானம் முன்பாக காய்கறிகள், பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சித்திரை மாதம் முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மடத்தில் உள்ள மகா பெரியவரின் அதிஷ்டானத்தின் முன்பாக காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவை காட்சியாக வைத்திருந்தனா். அவற்றை கண்ணாடியில் பாா்க்கும்படியும் வைத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

பழ வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை வைத்து வழிபடுவதன் மூலம் உணவுக்கு பஞ்சம் ஏற்படாமல் சிறப்புப் பலன்கள் உண்டாகும் என்பதாக ஐதீகம். எனவே ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இது விஷுக்கனி தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிஷ்டானம் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT