காஞ்சிபுரம்

ரம்ஜான் பண்டிகை: கோட்டாட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

DIN

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மசூதிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மசூதிகளின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சுங்குவாா்சத்திரம் காவல் நிலைய வளாகத்தில் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ தலைமையிலும், துணைக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் முன்னிலையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மசூதிகளின் நிா்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கான அரிசி மசூதி நிா்வாகிகளுக்கு மொத்தமாக வழங்கப்படும்; அதை நிா்வாகிகள், இஸ்லாமியக் குடும்பங்களுக்கு பிரித்துத் தரும்போதும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சுங்குவாா்சத்திரம் காவல் ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT