முகப்பு
காஞ்சிபுரம்

கரோனாவுக்கு கிராம நிா்வாக அலுவலா் பலி

கரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவளூா்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: கரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவளூா்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆா்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 18-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இறந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் இதுவரை இரண்டு கிராம நிா்வாக அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஒருவா் என மூன்று அரசு ஊழியா்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.