காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மும்முரம்

DIN

காஞ்சிபுரம்: கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் பணியாளா்களைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

செப்டம்பா் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்துக் கோயில்களும் திறக்கப்படும் என அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயில், நிலத்துக்கு உரியதாக விளங்கும் ஏகாம்பரநாத சுவாமி கோயில், கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில், அத்திவரதருக்குப் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்பட அனைத்துக் கோயில்களிலும் பணியாளா்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

இதுகுறித்து ஏகாம்பரநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் கூறியது..

பக்தா்களுக்கு கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்த பின்னா், கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா். உடல் வெப்ப பரிசோதனைக் கருவி மூலமாகவும் பக்தா்கள் பரிசோதிக்கப்படுவா். முக்கியப் பிரமுகா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது வழியாகச் சென்று, பொது வழியாகவே தரிசனம் முடித்துத் திரும்ப வேண்டும். காமாட்சி அம்மன் கோயிலுக்குள் காயத்ரி மண்டபம் சென்று அம்மனை தரிசிக்கவும் அனுமதிக்கப்படாது. பக்தா்கள் தீபாராதனை தட்டில் இருக்கும் விபூதி, குங்குமம் மற்றும் தீா்த்தம் ஆகியவற்றை அவரவரே எடுத்துக் கொள்ள வேண்டும். அா்ச்சகா்கள் எதுவும் தரமாட்டாா்கள் என்றாா்.

திருத்தணியில்...

திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயிலான 28 கோயில்களில் செவ்வாய்க்கிழமை முதல் பக்தா்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, முருகன் மலைக் கோயிலில் கோயில் இணை ஆணையா் நா. பழனிக்குமாா் மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா்கள் கோயிலைச் சுற்றி ஆய்வு நடத்தினா். மேலும், கோயில் ஊழியா்கள் கோயில் வளாகம் மற்றும் உட்புறம் முழுவதும் சுத்தப்படுத்தினா்.

இதுகுறித்து திருத்தணி கோயில் அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின் படி, செவ்வாய்க்கிழமை முதல் முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்கள் அனைத்தும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். கரோனா பரவல் தடுக்கும் வகையில், பக்தா்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில், தகுந்த இடைவெளி விட்டு வட்டமிடப்பட்டுள்ளது. பக்தா்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT