காஞ்சிபுரம்

அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச சிவலிங்கத்துக்கு கும்பாபிஷேகம்

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரக் கோயில் வளாகத்தில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டுள்ள அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச சிவலிங்கத்துக்கு வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கான கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அத்தி மரத்தாலும், ஒரு லட்சத்து 8 ருத்ராட்சங்களாலும் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமி அண்மையில் வழங்கியிருந்தாா்.

இந்த லிங்கத்துக்கும், ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கும் தனியாக கோயில் வளாகத்துக்குள் புதிய சந்நிதி எழுப்பப்பட்டு வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடத்தத் தீா்மானிக்கப்பட்டது.

இதையொட்டி, யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கின. இந்நிலையில், அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச சிவலிங்கத்துக்கும், சிவ சுப்பிரமணிய சுவாமிக்கும் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் மூலவரான நட்சத்திர விருட்ச விநாயகா் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளைத் தலைவா் வி.சுவாமிநாதய்யா் மற்றும் கோயில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT