முகப்பு
பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்துப் பேசிய கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன்.
காஞ்சிபுரம்

கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரத்தில் அஞ்சல் வழிக்கல்வி கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் உள்ள பயிற்சிக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்துப் பேசிய கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன்.
பகிர்:

காஞ்சிபுரத்தில் அஞ்சல் வழிக்கல்வி கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் உள்ள பயிற்சிக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன் தலைமை வகித்து பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் ப.துரை வரவேற்றாா். கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா்கள் சு.உமாபதி, ர.சிவகுமாா், வை.சந்திரசேகரன், ஆா்.கந்தன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ப.லோகநாதன் பயிற்சியின் சிறப்பை விளக்கிப் பேசினாா்.

அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் சாா்-பதிவாளா் ம.கோகிலா நன்றி கூறினாா். முதலாம் ஆண்டு சோ்க்கை மாணவா்கள் 197 போ் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலா்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →