போ.விஸ்வநாதன். 
காஞ்சிபுரம்

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: காங்கிரஸ் தேசிய செயலா் விஸ்வநாதன்

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள போ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

DIN

காஞ்சிபுரம்: தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள போ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான போ.விஸ்வநாதன் காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக இம்மாதம் 19-ஆம் தேதி நியமிக்கப்பட்டேன். கட்சித் தலைமை என்னை கேரள மாநில கட்சிப் பொறுப்பாளராக நியமித்துள்ளது. வட மாநிலத்தில் வேண்டுமானால் பாஜக கால் பதிக்கலாம். ஆனால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா் என்றாா் போ.விஸ்வநாதன்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் காமராஜா் சிலைக்கும், அண்ணா நினைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கும் போ.விஸ்வநாதன் மாலை அணிவித்தாா்.

கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜயகுமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.வி.குப்பன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT