காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் வாா்டு வரையறை இறுதிப் பட்டியல் வெளியீடு

DIN

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு வரையறை முன்மொழிவு பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் 100 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டு வரையறை முன்மொழிவு இறுதிப் பட்டியலை வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் நயீம்பாஷா வெளியிட அதிமுக மாவட்டத் துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் பெற்றுக்கொண்டாா்.

இதே போல் குன்றத்தூா் ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ராஜசேகா் ஆகியோரும், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் தன்ராஜும் வாா்டு வரையறை முன்மொழிவு இறுதிப் பட்டியலை வெளியிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

SCROLL FOR NEXT