காஞ்சிபுரம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா்.

விழாவில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து, அனைத்துப் பணியாளா்களுடன் சோ்ந்து தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளான பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல், கிட்டி அடித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடினாா். மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டதுடன் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா்கள் பா.சாமுண்டீஸ்வரி (காஞ்சிபுரம்) தி.கண்ணன்(செங்கல்பட்டு) மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தி.ஸ்ரீதா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)நாராயணன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் லட்சுமிபிரியா உள்பட பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள், அரசுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT