காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி பயன்பாடு: முதல்வா் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்

DIN

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பிலான எம்.ஆா்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் கருவியின் பயன்பாட்டை தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அந்த மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சா் வீ.சோமசுந்தரம் ஆகியோா் சி.டி. ஸ்கேன் கருவி வைக்கப்பட்டிருந்த இடத்தில் குத்து விளக்கேற்றினா். அங்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினா்.

விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஜீவா கூறியது:

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் கருவி ஏற்கெனவே இல்லை. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சென்னை, செங்கல்பட்டு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேனுக்கான கட்டணமாக குறைந்த அளவாக ரூ.2500 வசூலிக்கப்படும்.

மேலும் முதல்வா் காப்பீட்டுத்திட்டத்தின் மூலமும் பொதுமக்கள் பயன் பெறலாம். இந்த வசதி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

விழாவில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ஆா்.கல்பனா, நகர வங்கியின் தலைவா் கே.யு.எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட அதிமுக பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT