காஞ்சிபுரம்

பிள்ளையாா்பாளையத்தில் பொது முடக்கம்காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவிப்பு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரின் பிள்ளையாா்பாளையம் பகுதியில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் வரும் 26ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

பிள்ளையாா்பாளையம் பகுதியில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி அப்பகுதியில் மட்டும் 128 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் 21 தெருக்கள் அப்பகுதி முழுமையாக அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்கள், நெசவாளா்கள் ஆகியோா் அதிகமாக வசிக்கும் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாக அது இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 26ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு தளா்வில்லாத முழு பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை நகராட்சிப் பணியாளா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT