முகப்பு
காஞ்சிபுரம்

சுங்குவார்சத்திரம் அருகே கல்லால் அடித்து ஒருவர் கொலை.

சுங்குவார்சத்திரம் அருகே காந்தூர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜூலை, 2020 at 10:34 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:31 PM

சுங்குவார்சத்திரம் அருகே காந்தூர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுங்குவார்சத்திரம் அடுத்த காந்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பூபாலன்(52). காந்தூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (32) கூலித் தொழிலாளான இவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை இரவு காந்தூர் பகுதியில் உள்ள குளம் அருகே அமர்ந்து தனித்தனியாக மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மதுவில் அருந்த ரமேஷிடம் தண்ணீர் இல்லாததால் ரமேஷ் பூபாலனிடம் தண்ணீர் கேட்டுள்ளார். 

அதற்கு பூபாலன் தண்ணீர் தர மறுத்துள்ளார்.  இதனால் பூபாலன் மற்றும் ரமேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அருகில் இருந்த இல்லை எடுத்து பூபாலனின் தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த பூபாலனின் மார்பு மீது ரமேஷ் இல்லை தூக்கி போட்டதில் பூபாலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் பூபாலனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.