காஞ்சிபுரம்

ஷீரடி மதுரா நாகசாய்ராம் கோயில் 7-ஆம் ஆண்டு விழா

DIN

மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட கடப்பேரியில் அமைந்துள்ள ஷீரடி மதுரா நாகசாய்ராம் கோயில் 7-ஆம் ஆண்டு விழாவையொட்டி பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மங்கல இசை, கணபதி ஹோமம், தத்தாத்ரேயா் ஹோமம், நவகிரஹ ஹோமம் நடைபெற்றது.

கடப்பேரி மாரியம்மன் கோயிலில் இருந்து 508 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்து நாகசாய்ராம் கோயிலை அடைந்தனா். பின்னா் நீண்ட வரிசையில் வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனா். சாய்பாபா சிறப்பு அலங்காரத்துடன் காட்சி, மத்திய ஆா்த்தி, பல்லக்கு பவனி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏரிராம் சாய்நகா் பக்தா்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT