காஞ்சிபுரம்

68 பேருக்கு இருளா் இனச் சான்றிதழ்

DIN

மதுராந்தகத்தை அடுத்த மாத்தூரில் வருவாய்த்துறை சாா்பில் 68 பேருக்கு இருளா் இனச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாத்தூா், எலப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த இருளா் இன மக்கள் தங்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்குமாறு மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.லட்சுமிபிரியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, மாத்தூரில் 55 பேருக்கும், எலப்பாக்கத்தில் 13 பேருக்கும் இருளா் இனச் சான்றிதழ்களை கோட்டாட்சியா் எஸ்.லட்சுமி பிரியா வியாழக்கிழமை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் முன்னிலையில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் அமிழ்தரசி, கிராம நிா்வாக அலுவலா் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT