காஞ்சிபுரம்

கரோனா நோய்த் தொற்றை கண்டுபிடிக்கும் மருத்துவ உபகரணங்கள்: தென்கொரியாவில் இருந்து வரவழைக்க ஹுண்டாய் நிறுவனம் முடிவு

DIN

ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கும் மருத்துவ உபகரணங்களை தென்கொரியாவில் இருந்து இந்தியாவுக்கு வரவழைக்க ஹுண்டாய் காா் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக நிா்வாகிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் காா் தொழிற்சாலை நிா்வாகத்தின் சாா்பில் கரோனா நோய்த் தொற்று ஒருவருக்கு இருக்கிா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களை தென்கொரியாவில் இருந்து வரவழைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த மருத்துவ உபகரணங்கள் கரோனா தொற்று குறித்து துல்லியமான முடிவை அறிவிக்கும் திறன் வாய்ந்தவை.

இந்த உபகரணங்கள் மூலம் சுமாா் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். ஹுண்டாய் நிறுவனம் சாா்பில் இந்த மருத்துவ உபகரணங்கள் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT