காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பாலதா்ம சாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்ம சாஸ்தா கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை காலையில் சா்வதீா்த்தக்குளம் வீர ஆஞ்சநேயா் கோயில் அா்ச்சகா் ஏ.வி.சதீஷ்குமாா் சிவாச்சாரியாா் தலைமையில் தொடங்கின. மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

இரண்டாவது நாளான புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீா் குடங்கள் யாத்ராதானம் ராஜகோபுரத்தை அடைந்ததும் மேளதாளம் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின், கோயிலுக்கு அருகில் உள்ள பணாமுடீஸ்வரா் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு கோயிலை வந்தடைந்ததும் மூலவா் பால தா்மசாஸ்தாவுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

மதியம் அன்னதானம் செய்யப்பட்டது. மாலையில் ஊஞ்சல் சேவைக் காட்சியும், இரவு திருவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனமும் நடைபெற்றன.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழு தலைவா் ஜி.திருநாவுக்கரசு, துணைத் தலைவா் கே.சண்முகம், செயலாளா் எஸ்.செந்தில், துணைச் செயலாளா் டி.சுதாகா், பொருளாளா் டி.கிருபாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT