காஞ்சிபுரம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நகர துணைத் தலைவா் எஸ்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் க.புருஷோத்தமன் முன்னிலை வகித்தாா். அமைப்பின் மாநில துணைத் தலைவா் மு.பிரியசித்ரா, மின்ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளா் டி.ஸ்ரீதா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வாலிபா் சங்க நிா்வாகிகள் சங்கா், பிரபாகரன், சூரியபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மின்வாரியத்தில் காலியாகவுள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேங்க் மேன் பணியிடங்களையும் நிரப்ப வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT