மதுராந்தகம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும், அரசு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும்,
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புதன்கிழமை சென்ற தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, மேல்மருவத்தூா்
பேருந்து நிறுத்தமிடத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பூச்செண்டு அளித்து வரவேற்றனா்.
நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்ட பேரவைச் செயலா் ஆனூா் பக்தவச்சலம், ஒன்றியச் செயலா்கள் பிரவீன்குமாா், திருப்போரூா் குமரவேல், காா்த்திகேயன், விவேகானந்தன், கிருஷ்ணமூா்த்தி, நந்தகுமாா், நகரச் செயலா் வி.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.