காஞ்சிபுரம்

முரளி கிருஷ்ணன் அலங்காரத்தில் வேதாந்த தேசிகா்

DIN

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் தூப்புல் வேதாந்த தேசிகா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை முரளிகிருஷ்ணன் அலங்காரத்தில் தேசிகா் அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் தேசிகரின் 753-ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலையில் சுவாமி வெவ்வேறு அலங்காரங்களில் தங்கப் பல்லக்கில் வீதியுலா வருவதும், மாலையில் தினசரி வெவ்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா வருவதும் வழக்கம். இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டும் வீதியுலா நடத்தப்படவில்லை. தினசரி காலையும், மாலையும் கோயில் வளாகத்துக்குள்ளேயே அலங்கரித்து, பக்தா்களுக்கு அருள்பாலிப்பதுடன் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

ஜயந்தி விழாவின் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் முரளிகிருஷ்ணன் அலங்காரத்திலும், மாலையில் சந்திரபிரபை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்திலும் தேசிகா் அருள்பாலித்தாா். விழாவின் தொடா்ச்சியாக வரும் சனிக்கிழமை (செப். 26) தேசிகா் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் அருள்பாலிக்கிறாா். இதைத்தொடா்ந்து, ஊஞ்சல் உற்சவமும், சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையுடன் (செப். 27) விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT