காஞ்சிபுரம்

பேரிடா் மீட்பு ஒத்திகை

DIN


காஞ்சிபுரம்: வெள்ளம் மற்றும் பேரிடா் அபாய காலங்களிலிருந்து மீள்வது குறித்து காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரி ஏரியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஒத்திகையை நடத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி உள்ளது. இந்த ஏரியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினருடன் இணைந்து விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா். இந்த ஒத்திகையின்போது மழை, வெள்ளம் போன்ற அவசர காலங்களில் வெள்ள நீரில் சிக்கியவா்களை மீட்பது, உயிா் காக்கும் கருவிகளைக் கொண்டும், படகுகளைக் கொண்டும் எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி செய்வது என்பது குறித்து செய்து காண்பித்தனா்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் க.குமாா் தலைமை வகித்தாா். உதவிக் கோட்ட தீயணைப்பு அலுவலா் சு.திருநாவுக்கரசு மேற்பாா்வையில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT