காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர் பிரபல நடிகர்கள்.

Published On :

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்ததால், பல பகுதிகளில் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் மலைப் பிரதேசங்களுக்கும், தீவுகளுக்கும் செல்கின்றனர். கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளனர்.

Story image

அதேபோல், பாலி தீவுக்கு சென்ற எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியாவின் விடியோ பதிவுகளும் இணையத்தில் டிரெண்டானது.

இந்நிலையில், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளமான ஏற்காட்டுக்கு ஏராளமான மக்கள் செல்கின்றனர். இங்கு 300-க்கும் மேற்ப்பட்ட தங்கும் விடுதிகளும், பல்வேறு வகையான உணவகங்களும் உள்ளன.

இந்தியாவிலேயே முதன் முறையாக மலைப் பிரதேசத்தில் எங்கும் இல்லாத அளவில் விமானத்திற்குள் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் ஆண்டுதோறும் மே மாதங்களில் பூக்கும் மே பிளவா்களும் பூத்துக் குலுங்குகின்றன.

இந்த நிலையில், தற்போது 5 பிரபல நடிகர்கள் கோடையை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் சென்றுள்ளனர். தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த்தும் இவர்களுடன் உள்ளார்.

Story image

நடிகர் பரத் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.