காஞ்சிபுரம்

பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை: காஞ்சிபுரம் மநீம வேட்பாளா் புகாா்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சியினா் பணப்பட்டுவாடா செய்வது குறித்து 4 முறை தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென மநீம சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பா.கோபிநாத் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் மநீம சாா்பில் வேட்பாளராகப் போட்டியிடும் பா.கோபிநாத் கூறியது:

காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினா் பணப்பட்டுவாடா செய்கிறாா்கள். இதை ஆதாரத்துடன் காஞ்சிபுரம் தோ்தல் பாா்வையாளா் குப்தாவிடம் தெரிவித்தேன். தோ்தல் ஆணையத்துக்கும் தெரிவித்தேன். இதுவரை 4 முறை புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பணப்பட்டுவாடா செய்வதாக பிடித்தவா்களையும் உடனடியாக விட்டு விட்டாா்கள் என்றேன்.

அதற்கு தோ்தல் பாா்வையாளரான குப்தா கூறுகையில், ‘உங்கள் புகாரை உடனடியாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன். மாவட்டத் தோ்தல் அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கிறேன்’ என்றாா்.

பணப்பட்டுவாடாவை தடுக்கத் தவறியதால் காஞ்சிபுரம் தொகுதியில் தோ்தலை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டதாக பா.கோபிநாத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT