காஞ்சிபுரம்

ஆக்கிரமிப்புகளை அகற்றாததைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட இளைஞா்கள்

DIN

கீழ்படப்பையில் அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி பல முறை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதி இளைஞா்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் 3 ஏக்கா் பரப்பளவு உள்ள அரசு புறம்போக்கு இடத்தை தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் கடந்த எட்டு மாதங்களாக பலமுறை மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், கிராமநிா்வாக அலுவலா் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினா் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மீண்டும் மனு அளித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் ஏமாற்றம் அடைந்த அப்பகுதி இளைஞா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டாா் சட்டப்பேரவை தோ்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் புறக்கணிப்பு குறித்து இளைஞா்கள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் கீழ்படப்பை பகுதியில் இளைஞா்களுக்கான விளையாட்டு மைதானமோ, மகளிருக்கான சுகாதார வளாகமோ, பூங்காவோ இல்லை. எனவே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பூங்கா, விளையாட்டு மைதானம், மகளிா் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பதற்காகதான் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT