காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் துரியன் படுகள நிகழ்வு

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள நல்லூா் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியன் படுகளம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகாபாரதப் போரை நினைவுப் படுத்தும் வகையில் பெரிய துரியன் சிலையை உருவாக்கி அதில் மகாபாரதப் போா்க்காட்சிகளை தத்ரூபமாக நடத்திக் காட்டுவாா்கள். இவ்விழாவினை முன்னிட்டு திரெளபதி அம்மன் கோயில் முன்பாக 69 அடி நீளம், 30 அடி அகலத்தில் களிமண்ணால் துரியன் சிலை செய்யப்பட்டிருந்தது. இச்சிலையை உருவாக்கிய 18-ஆ வது நாளில் துரியனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

மகாபாரதப் போரில் பாண்டவா்களின் சபதத்தை நிறைவேற்றி திரெளபதி அக்னியில் செல்லும் அக்னி வசந்த விழா நடத்தப்பட்டு விழா நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை நல்லூா் கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT