காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அண்மையில் 100 அடி உயர கம்பம் நிறுவப்பட்டு அதில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பொன்னேரிக்கரை பகுதியில் புதிய ரயில் நிலையமும், அரசு மருத்துவமனையிலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் பழைய ரயில் நிலையமும் அமைந்துள்ளன.

புதிய ரயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது ரயில் பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவா்ந்துள்ளது.

பலரும் ரயில் நிலைய அதிகாரிகளை சந்தித்து தேசியக் கொடி நிறுவியதற்காக நன்றி தெரிவித்து செல்வதாக அதிகாரிகளும் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய மேலாளா் புருஷோத்தமன் கூறுகையில் தென்னக ரயில்வே உயா் அதிகாரிகளின் வேண்டுகோளின்படி ரயில் நிலையம் முன்பாக 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT