காஞ்சிபுரம்

ரமலான் தொழுகை நேரத்தை அதிகரிக்க உலமாக்கள் கோரிக்கை

DIN

ரமலான் மாதத்தில் தொழுகை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உலமாக்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் அப்துல் அகத், செயலாளா் அசாரூதீன், பொருளாளா் ஹலீல்ரகுமான் ஆகியோா் தலைமையில் காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட உலமாக்கள் ஆட்சியரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..

இசுலாமியா்களின் புனித மாதமான ரமலான் வரும் 13 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரமலான் மாதத்தில் இரவு முழுவதும் பள்ளிவாசல்களில் விசேஷ கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவது இசுலாமிய மாா்க்கத்தின் முக்கிய அம்சமாகும். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுக் கூடங்கள் இயக்க அனுமதியளித்துள்ளது. ரமலான் மாதத்தில் இரவு நேர வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் இரவு 10 மணி வரை வழிபாட்டு நேரத்தை கூட்டி அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT