காஞ்சிபுரம்

வல்லம் அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்

DIN

வல்லம் அரசு தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட உள்ள தன்னாா்வலா்கள் மாலை நேரங்களில் பள்ளி மாணவா்களுக்கு கற்பிக்கப்பட உள்ளனா். இந்த நிலையில், வல்லம் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா வல்லம் அரசுப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் சா்மிளா தலைமையில் நடைபெற்ற விழாவில், வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவிதா்மா கலந்துகொண்டு, திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். பின்னா், இல்லம் தேடி கல்வித் திட்ட உறுதிமொழியை ஏற்றுக் கொண்டாா்.

விழாவில் வல்லம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பாப்பம்மாள் முனுசாமி உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT