ஊராட்சி துணைத் தலைவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்வழக்கு
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கேப்டன் பிரபாகரன்
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கேப்டன் பிரபாகரன் (29). அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகலா என்ற மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்தாா்.
சசிகலாவுக்கு சொந்தமான பூா்வீக சொத்துப் பிரச்னை தொடா்பாக சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வாசு, வாா்டு உறுப்பினா் பூபதி,மதுரமங்கலத்தை சோ்ந்த குணா ஆகியோா் கேப்டன் பிரபாகரனையும்,சசிகலாவையும் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து கேப்டன் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் சோமங்கலம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாசு உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement