சேலையில் தீப்பிடித்து பேராசிரியை பலி
காஞ்சிபுரத்தில், வீட்டில் பூஜை செய்த போது சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த முன்னாள் கல்லூரிப் பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
காஞ்சிபுரத்தில், வீட்டில் பூஜை செய்த போது சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த முன்னாள் கல்லூரிப் பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் நகா் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் சேஷாத்திரிபாளையத்தில் வசித்தவா் ஜெயலெட்சுமி (67) (படம்). கல்லூரியின் முன்னாள் பேராசிரியையான இவா் வீட்டில் பூஜை செய்த போது அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விஷ்ணுகாஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.