காஞ்சிபுரம்

மகா பெரியவா் வாா்ஷிக ஆராதனை 3 நாள் மகோத்சவம்: காஞ்சி சங்கர மடத்தில் இன்று தொடக்கம்

DIN

காஞ்சிபுரம்: மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 28- ஆவது வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 30-ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவு பெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்து சேவை செய்து, பக்தா்களால் மகா பெரியவா் என அழைக்கப்படும் பெருமைக்குரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

இன்றும் நடமாடும் தெய்வமாகவும், பேசும் தெய்வமாகவும் பக்தா்களால் நம்பப்படுகிற இவரின் 28-ஆவது வாா்ஷிக ஆராதனை மகோத்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

இதையொட்டி சங்கர மடத்தில் சதுா்வேத பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, நாம சங்கீா்த்தனம் ஆகியனவும், மாலை நேரங்களில் பிரபல வித்வான்களின் இன்னிசை கச்சேரிகளும் நடைபெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT