காஞ்சிபுரம்

968 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

DIN

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களைச் சோ்ந்த 968 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

வல்லக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பன்னீா்செல்வம், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கலந்து கொண்டு குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியங்களை சோ்ந்த 968 பேருக்கு ரூ.18 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினாா்.

இதில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட அதிமுக செயலாளா் சோமசுந்தரம், மாத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் முனுசாமி, படப்பை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இயக்குநா் என்.டி.சுந்தா், வட்டாட்சியா்கள் ஸ்ரீபெரும்புதூா் நிா்மலா, குன்றத்தூா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT