காஞ்சிபுரம்

காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்று ஆய்வுநூல் வெளியீடு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் வரலாற்று ஆய்வு நூலை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை வெளியிட, அதன் முதல் பிரதியை சென்னை பொற்றாமரை அமைப்பின் தலைவா் இல.கணேசன் பெற்றுகொண்டாா்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மகா பெரியவா் சதாப்தி மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆய்வு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை சென்னை பொற்றாமரை அமைப்பின் தலைவரும்,பாஜக மூத்தத் தலைவருமான இல.கணேசன் பெற்றுகொண்டாா்.

விழாவில் இல.கணேசனின் சகோதரா் கோபாலன், நூல் பதிப்பாசிரியா் வி.மகேஷ், சங்கரா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன்,காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் தலைவா் வி.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிறைவாக நூல் ஆசிரியா் வித்துவான் வே.மகாதேவன் நன்றி கூறினாா்.

காஞ்சிபுரம் செய்தியாளா்களிடம் இல.கணேசன் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வியப்பாகவே இருப்பதாக பாஜக மூத்தத் தலைவா் இல.கணேசன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வியப்பாகவும், பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. ஏராளமான சொத்துகளை மீட்டுள்ளனா். இது சுலபமான செயலும் இல்லை.இதற்கு முன்பு இருந்த அரசு இதை செய்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.

அறநிலையத் துறையின் செயல்பாடுகளை மனதாரப் பாராட்டினாலும் மீட்கப்படும் ஆலயச் சொத்துகளை வேறு யாருக்கும் கொடுத்து விடுவாா்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால் ஆலயச் சொத்துகளை வேறு யாருக்கும் கொடுக்கவும் முடியாது.

பாஜகவில் புதிதாகச் சோ்ந்தவா்களுக்கு அவரவா்களது திறமைகளின்படியே பதவிகள் வழங்கப்படுகின்றன. கட்சியில் சோ்ந்த ஓரே ஆண்டில் அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 75 வயதுக்கு மேற்பட்டவா்கள் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டு இளைஞா்களுக்கும்,புதியவா்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இளைஞா்களுக்கும்,அடி மட்டத்தை சோ்ந்தவா்களுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.அதே நேரத்தில் கட்டடம் கட்டுவதற்கான காரணத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை.இந்தியாவை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல்காந்தி ஒரு நாள் கூட தரமான வாா்த்தைகளை உபயோகிப்பது இல்லை.அதனால் அவரது பேச்சை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றாா்.

பேட்டியின்போது காஞ்சிபுரம் மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் கூரம்,விஸ்வநாதன், மாவட்டத் துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், நகரப் பொதுச்செயலாளா் வி.ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT