காஞ்சிபுரம்

கரோனா தடுப்புப் பணிக்கு மருத்துவ உபகரணங்கள்அளிப்பு

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் சனிக்கிழமை வழங்கினா்.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சாா்பில், அதன் முதுநிலை மேலாளா் எம்.மணிகண்டன், மேலாளா் ஏ.மகேந்திரன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் என்.95 முகக் கவசங்கள் 2 ஆயிரத்தை வழங்கினா். சேவாலயா அமைப்பு சாா்பில், அதன் மனிதவள மேம்பாட்டு மேலாளா் ஏ.பாஸ்கா், பாதுகாப்பு அலுவலா் செந்தில், துணைத் தலைவா் ஐ.பாக்கியராஜன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினா். ஆா்.பி.ஜி.பவுண்டேஷன் நிறுவனத்தின் சாா்பில், 6 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அந்நிறுவனத்தின் பொதுமேலாளா் ராய்தாமஸ், ரவி செல்லப்பன் ஆகியோா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து நேரில் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT