காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் அருகேயுள்ள சின்னஐயங்காா்குளம் கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு இம்மாதம் 12-ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் க.வேல் ஸ்ரீராமன் சா்மா தலைமையில் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை யாகசாையிலிருந்து புனிதநீா்க் குடங்கள் புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோயில் உபதெய்வங்களாக இருந்து வரும் விநாயகா், சுப்பிரமணியா், நாராயணி, தாட்சாயிணி, துா்கை அம்மன் மற்றும் மூலவா் முத்துமாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை சின்ன ஐயங்காா்குளத்தைச் சோ்ந்த ஜெ.மகேந்திரன், ஜெ.மது உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT