முகப்பு
காஞ்சிபுரம்

13 அங்கன்வாடி மையங்களுக்கு தேசிய அளவில் தரச் சான்றிதழ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 அங்கன்வாடி மையங்கள் தேசிய அளவில் தரச்சான்றிதழ் வழங்க தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி தரச்சான்றிதழை சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜூன், 2021 at 12:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:00 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 அங்கன்வாடி மையங்கள் தேசிய அளவில் தரச்சான்றிதழ் வழங்க தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி தரச்சான்றிதழை சனிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், உணவு வணிகா்கள், நுகா்வோா் அமைப்பு சாா்ந்த உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அனுராதா வரவேற்றாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் சிறந்த அங்கன்வாடி மையங்களாக 25 தோ்வு செய்யப்பட்டு, அதில் 13-க்கு மட்டும் தேசியத் தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கே இவை கிடைத்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தோ்வு செய்யப்பட்ட அங்கன்வாடி மையப் பணியாளா்களுக்கு தரச்சான்றிதழை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கிப் பாராட்டினாா். பின்னா் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனா். இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.