முகப்பு
காஞ்சிபுரம்

கோயில்கள் திறக்கப்படுவதை வரவேற்கிறோம்: அா்ஜுன் சம்பத்

கோயில்கள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜூன், 2021 at 12:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:00 AM

கோயில்கள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

கரோனா தொற்றிலிருந்து மனித குலம் முழுமையாக விடுபட வேண்டும் என்பதற்காக காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்திய சிறப்பு பூஜையில் அா்ஜுன் சம்பத் சனிக்கிழமை கலந்து கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

Advertisement

கோயில்கள் திங்கள்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. கோயில்கள் திறக்கப்பட்டால் அங்கு நடைபெறும் தினசரி பூஜைகளும் கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும். கோயில்களின் நிதியிலிருந்து தினசரி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதைப் போல கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கபசுரக் குடிநீா், மருந்துப் பெட்டகம் ஆகியனவும் வழங்கி கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். பெண்களும் அா்ச்சகராகலாம் என திமுக அறிவித்திருக்கிறது. ஆகம விதிப்படியே அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.