காஞ்சிபுரம்

திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

DIN

காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி யில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயாா் சமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான சனிக்கிழமை விஜயராகவ பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா். அா்ச்சகா்கள் திவ்ய பிரபந்தம் பாட, பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட அலங்கரிக்கப்பட்ட தேரில் விஜயராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருப்புட்குழி கிராமத்துக்குள்பட்ட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த தோ்த் திருவிழாவில் திருப்புட்குழி, பாலுசெட்டி சத்திரம், முசரவாக்கம், முட்டவாக்கம், தாமல் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீவிஜயராகவ பெருமாளை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூரையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT