காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி திருவிழா நிறைவு

DIN

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவமூா்த்திகள் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில், நகரின் ராஜ வீதிகளில் உலா வந்தனா். இம்மாதம் 23-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் திருக்கூட்ட ஊா்வலமும், இரவு வெள்ளித் தோ் உற்சவமும், 24-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.

26-ஆம் தேதி கோயில் வரலாற்று மகிமையை விளக்கும் வெள்ளி மாவடி சேவை நிகழ்ச்சியும், 27-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

விழாவின் நிறைவாக செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பவழக்கால் சப்பரத்திலும் பவனி வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT