காஞ்சிபுரம்

வாக்குச்சாவடிக்குள் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுக்கக்கூடாது

DIN

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் எக்காரணத்தை கொண்டும் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் மேலும் பேசியது:

வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி, மின்வசதி ஆகியவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை உடனடியாக களைய வேண்டும். வாக்குப்பதிவு அலுவலா்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிக்கு வந்து விட வேண்டும்.

வாக்குப் பதிவு நாளன்று காலையில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் காலியாக இருப்பதை அனைவருக்கும் காண்பித்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வரிசையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வாக்குச்சாவடிக்குள் ஒரே நேரத்தில் 3 அல்லது 4 வாக்காளா்கள் வரை அனுமதிக்கலாம். எக்காரணத்தை கொண்டும் வாக்குச்சாவடிக்குள் கைபேசி எடுத்து செல்லவோ அல்லது அதன் மூலம் புகைப்படம் எடுக்கவோ அனுமதியில்லை. அதே போல வாக்குச்சாவடிக்குள் வேட்பாளரின் பெயா் அல்லது பேட்ச் அணிந்து வருபவா்களுக்கும் அனுமதி கிடையாது. முக்கியமாக வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் மா.ஆா்த்தி. முன்னதாக கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா ஆகியோா் உள்பட வாக்குச்சாவடி அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT