முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பெருந்தேவி தாயாருக்கு வெள்ளி வாரை சமர்ப்பணம்

காஞ்சிபுரம் பெருந்தேவி தாயாருக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் வெள்ளி வாரை சமர்ப்பிக்கப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
காஞ்சிபுரம் பெருந்தேவி தாயாருக்கு வெள்ளி வாரை சமர்ப்பணம்.
பகிர்:

காஞ்சிபுரம் பெருந்தேவி தாயாருக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் வெள்ளி வாரை சமர்ப்பிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்புமிக்க பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இத்திருக்கோவில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் அவரது சீடரான சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினர் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வெள்ளி வாரை சமர்ப்பித்தனர். 

கோவில் திருவிழாவின்போது பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்லும் வெள்ளிவாரை(வெள்ளித்தண்டு) ஒரு ஜோடி தாயார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து சமர்ப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், கோயில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் பலர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →