அரியலூா் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்!
அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன் ஆண்டிமடத்துக்கும், தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் செந்துறைக்கும், செந்துறை கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி செந்துறை வட்டார ஊராட்சிக்கும், செந்துறை வட்டார ஊராட்சி அலுவலா் முருகன் அரியலூருக்கும், ஆண்டிமடம்வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செல்வன் ஆண்டிமடம் கிராம ஊராட்சிக்கும், ஆண்டிமடம் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்சாமி திருமானூருக்கும், திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பொய்யாமொழி ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் கஸ்தூரி அரியலூா் கிராம ஊராட்சிக்கும், அரியலூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் தா.பழூருக்கும், திருமானூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் திருமானூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement