காஞ்சிபுரம்

தேனம்பாக்கத்தில் ரூ.25 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: காஞ்சிபுரம் மேயா் அடிக்கல் நாட்டினாா்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் உத்தரமேரூா் சட்டப் பேரவை உறுப்பினா் க.சுந்தரிடம் கோரிக்கை வைத்தனா். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அவரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தேனம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.

இது குறித்து மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில், இங்கு 2 மாதத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.இந்தச் சுகாதார நிலையம் தொடங்கப்பட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு மிகுந்த பயனுள்ள இடமாக மாறி விடும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சிப் பொறியாளா் கணேசன், மண்டலக் குழுத் தலைவா் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், திமுக நகரச் செயலாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், இளைஞரணித் துணை அமைப்பாளா் யுவராஜ் மற்றும் மாநகா் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT